ஷா ஆலம், ஜூலை 31- பதிமூன்றாவது மலேசியத் திட்டத்திற்காக
மொத்தம் 61,100 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தொகையில் 43,000 கோடி வெள்ளி 2026 முதல் 2030ஆம் ஆண்டு
வரையிலான காலக்கட்டத்திற்கு அரசாங்க நிதியை உட்படுத்தியதாக
இருக்கும்.
அந்த முதலீட்டில் 12,000 கோடி வெள்ளி அரசு தொடர்புடைய நிறுவனங்கள்
மற்றும் அரசாங்க முதலீட்டு நிறுவனங்கள் மூலமாகவும் 6,100 கோடி
வெள்ளி அரசாங்க மற்றும் தனியார் துறை கூட்டுச் செயல்முறையின்
வாயிலாகவும் பெறப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.
“வளர்ச்சியை மறுவரையறை செய்தல்“ எனும் கருப்பொருளிலான இந்த
பதிமூன்றாவது மலேசியத் திட்டத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு உந்து
சக்தியாக விளங்கும் பொருளாதாரத் துறைக்கு 22,700 கோடி வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று 13வது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த
போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.