கோலாலம்பூர், ஜூலை 31 - தேசிய தினம், மலேசிய தின மற்றும் இரண்டாம் தவணை பள்ளி விடுமுறையை முன்னிட்டு கே.எல்-சென்டரல் - பாடாங் பெசார் வழித்தடத்தில் இரண்டு கூடுதல் மின்சார ரயில் சேவையை (இ.டி.எஸ்) KTMB, ஏற்பாடு செய்யவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர் முதலாம் தேதி வரை, செப்டம்பர் ஐந்து தொடங்கி ஏழாம் தேதி வரை, செப்டம்பர் 2 தொடங்கி 21ஆம் தேதி வரை 18 நாட்களுக்கு இச்சேவை செயல்படும் என்று KTMB ஓர் அறிக்கையின் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை 10 மணி தொடங்கி இச்சேவைகளுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை தொடங்கும். நாள் ஒன்றுக்கு 630 இருக்கைகள் வழங்கப்படும் என்று KTMB தெரிவித்துள்ளது.
இச்சேவை செயல்படும் காலக்கட்டம் முழுவதும் மொத்தம் 11,340 இருக்கைகள் வழங்கப்படும்.
கூடுதல் இ.டி.எஸ் சேவை, பாடாங் பெசாரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு மாலை மணி 4.30-க்கு கே.எல் சென்டரலை சென்றடையும்.
அதோடு, அச்சேவை கே.எல் சென்டரில் இருந்து மாலை மணி 5.00-க்கு புறப்பட்டு இரவு மணி 10.20-க்கு பாடாங் பெசாரை சென்றடையும்.
பெர்னாமா