ad
ACTIVITIES AND ADS

'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்!  ஙா கோர் மிங்

28 ஜூலை 2025, 8:37 AM
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்!  ஙா கோர் மிங்
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்!  ஙா கோர் மிங்

கோலாலம்பூர், ஜூலை 28 - எதிர்க்கட்சி கூட்டணியான பெரிகாத்தான் நேஷனல் ஏற்பாடு செய்த 'துருன் அன்வர்' பேரணியைத் தொடர்ந்து 20 டன் குப்பைகள் கோலாலம்பூர் வீதிகளில் சிதறிக் கிடந்ததாக வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்  ஙா கோர் மிங் வெளியிட்ட தனது அறிக்கையில் உறுதியாக உள்ளார்.

.பேரணி முடிந்த பிறகு சுத்தம் செய்த திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவுக் கழகத்தால் SW corp (எஸ். டபிள்யூ. கார்ப்) தரவு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

"20 டன் குப்பைகள் எஞ்சியுள்ளன என்ற கூற்று என்னிடமிருந்து வரவில்லை, அது எஸ். டபிள்யூ. கார்ப் நிறுவனத்தின் அறிக்கையில்  இருந்து பெற்றேன்.

"கருப்பு சட்டை பேரணிக்குப் பிறகு கழிவுகளை சுத்தம் செய்ய எங்கள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

யூனிட் அமாலைச் சேர்ந்த ஒரு குழு சுத்தம் செய்ய உதவியது என்பதை நான் மறுக்கவில்லை, அதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

ஆனால் சோகோ, டத்தாரன் மெர்டேகா மற்றும் ஜாலான் பெட்டாலிங் முழுவதும் 20 டன் குப்பைகள் சிதறிக்கிடந்தன என்பதையும் மறுக்க முடியாது "என்று அவர் இன்று டேவான் ராக்யாட்டில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

20 டன் குப்பைகளா என கேள்வி கேட்டு, அதை பொய் என பெண்டாங் எம். பி. டத்தோ அவாங் ஹாஷிமின்  சாட்டினார்.  அதற்கு பதிலளித்த  அமைச்சர்  ஙா கோர் மிங், பேரணிக்குச் செல்வோரின் சுகாதாரமற்ற நடத்தையை  விமர்சித்தார், இதுபோன்ற கூட்டங்கள் அமைதியாகவும், தூய்மையைப் பராமரிப்பது உட்பட ஒழுங்காகவும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நேற்று, கிட்டத்தட்ட 20 மெட்ரிக் டன் குப்பைகள் சிதறிக்கிடந்த பின்னர், சுற்றுச்சூழல் பொறுப்பு இல்லாததற்காக பேரணி அமைப்பாளர்களை 'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கே. எல்-ல் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்களா? நிறுவனத்திடமிருந்து வந்தவை என்று கூறுகிறார்

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.