ad
ANTARABANGSA

காஸாவில் கடும் பஞ்சம் - உணவுப் பொருள் ஏற்றிய 73 டிரக்குகளுக்கு மட்டுமே அனுமதி

28 ஜூலை 2025, 3:26 AM
காஸாவில் கடும் பஞ்சம் - உணவுப் பொருள் ஏற்றிய 73 டிரக்குகளுக்கு மட்டுமே அனுமதி

இஸ்தான்புல், ஜூலை 28 - பல மாதங்களாக நீடித்து வரும் இஸ்ரேலின்

தடைகள் காரணமாக காஸாவில் பஞ்சம் மிக மோசமான கட்டத்தை

எட்டியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உணவுப் பொருள் ஏற்றிய

73 டிரக்குகள் மட்டுமே அந்த பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாக

அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஸாவில் மனிதாபிமான நிலைய முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு

மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாகக் காஸா அரசாங்க ஊடக

அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றில் கூறியது.

இஸ்ரேல் இனப்படுகொலைத் தாக்குதலைத் தொடங்கியது முதல்

இதுவரை 87 சிறார்கள் உள்பட 133 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக

அது தெரிவித்தது.

இந்த பிராந்தியதில் குழப்பத்தையும் பட்டினி நிலையையும் இஸ்ரேல்

வேண்டுமென்றே கட்டவிழ்த்து விடுவதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

இங்கு பஞ்சம் அச்சமூட்டும் அளவுக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 11 லட்சம் சிறார்கள் உள்பட காஸா மக்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஸாவுக்கு பெரும் எண்ணிக்கையிலான உணவு டிரக்குகளை அனுப்பும்

திட்டத்தை பல நாட்டு அரசாங்கங்களும் அனைத்துலக அமைப்புகளும்

வெளியிட்டுள்ள போதிலும் இதுவரை காஸாவுக்குள் நுழைய 73

டிரக்குகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த 73 டிரக்குகளில் பெரும்பாலானவற்றில் இருந்த உணவுப்

பொருள்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் சூறையாடப்பட்டன அல்லது

தடுத்து நிறுத்தப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.