மூவார், ஜூலை 28 - அமெரிக்கா, கொலராடோவில் உள்ள டென்வர் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் போயிங் ரக விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, அமெரிக்கன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
டென்வரிலிருந்து மயாமி புறப்பட ஓடுபாதையில் சென்றுக் கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் தீ பிடித்தது. விமானத்தின் அவசர கதவுகளின் வழி, பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
173 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரினால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் இச்சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனம் உறுதி அளித்திருக்கிறது.
பெர்னாமா