இந்த விபத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அந்த 23 வயது இளைஞர் சம்பவம் நடந்தபோது கம்போங் மெலாயு சுபாங்கில் உள்ள தனது வீட்டிலிருந்து கோலாலம்பூரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைக்குச் சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ ஷா ஆலம் மாவட்ட காவல் தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூர் இக்மல் மைசாரா அஸ்மானை 012-283 6851 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.