PENDIDIKAN

மலேசிய இந்திய மாணவர்கள் சதுரங்க போட்டியில் உலகளவில் சாதனை புரிய  இதுபோன்ற போட்டிகள் அவசியம் .

26 ஜூலை 2025, 4:58 PM
மலேசிய இந்திய மாணவர்கள் சதுரங்க போட்டியில் உலகளவில் சாதனை புரிய  இதுபோன்ற போட்டிகள் அவசியம் .

ஷா ஆலம், ஜூலை 26 - இந்த சதுரங்க போட்டியில் பங்கேற்ற 1326 மாணவர்கள் மொத்தம் 12 பிரிவுகளில் போட்டியிட்டனர் என இந்நிகழ்வின் இயக்குநர் திரு இளங்கோவன் கூறினார். ஒவ்வொரு பிரிவிலும் 30 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார். முதல் பத்து இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். 11-30 வரை வரும் மாணவர்கள் சான்றிதழ்களை பெறுவார்கள் என்றார் இளங்கோவன். முதலில் இந்த சதுரங்க போட்டி சிலாங்கூர் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளை மாணவர்களின் சிறப்பான ஆதரவால் தேசிய அளவில் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். நான்காவது முறையாக நடைபெறும் இப்போட்டியில் ஒவ்வொரு வருடமும் பங்குபெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும்  ஒரு பெரிய சாதனையாக தான் கருதுவதாக அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார். இப்போட்டியை பற்றிய தகவல்கள் முகநூல், புலன குழு போன்ற சமூக தளங்கள் மூலம் நாடு முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. அதன் விளைவாக மாணவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரிப்பதாக அவர் விளக்கினார். அதுமட்டுமல்லாமல், வழங்கப்படும் சிறப்பான பரிசு களுக்காகவும் இப்போட்டியில் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்நாட்டில் வாழும் இந்திய மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி  இது போன்ற  போட்டியில் கலந்து கொண்டு ஊக்கமும்  உற்சாகமும்   பெற்றால்  உலகளவில் சாதனை புரியும்   மன வலிமையை   பெறுவர். இதுபோன்ற நிகழ்வுகள் நம் பிள்ளைகளுக்கு குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு  தோல்வி மற்றும் தாழ்வு மனப்பான்மையை அகற்றி அவர்களை வெற்றியாளர்களாக  உயர்த்தும் என ஏற்பாட்டாளர்கள்  நம்புகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.