அமோர், ஜூலை 25 - ``Anggara Airines`` நிறுவனத்தின் விமானம் ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் சீன எல்லைக்கு அருகே விபத்துக்குள்ளானது. அதில் 5 சிறார்கள் உட்பட சுமார் 49 பேர் பயணம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
``Tynda`` நகரை அந்த விமானம் நெருங்கியபோது ராடாரிலிருந்து மறைந்தாக அறிவிக்கப்பட்டது. Tynda விலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதி வட்டாரத்தில் தீ எரிந்துகொண்டிருந்ததால் விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் எவரும் உயிர் பிழைத்ததற்கான வாய்ப்பு இல்லை என மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர். தொலைதூரத்திலுள்ள காட்டுப் பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஹெலிகாப்டர்கள் உதவியோடு தரைப்படையும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கு விமானியின் தொழில்நுட்ப தவறு மற்றும், தெளிவாகப் பார்க்க முடியாத சூழ்நிலையும் காரணம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ரஷ்ய விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.