பூச்சோங் ஜூலை 24 ;-மலேசியாவில் கபடி விளையாட்டு மைதானமாக தோட்டப்புற மற்றும் கிரமப்புற சூழ்நிலைக்கு ஏற்ப ஆங்காங்கே விளையாட்டாளர்கள் மைதானங்களை அமைத்துக் கொண்டது உண்டு. ஆனால் இத்தனை ஆண்டுகளாக இந்த பாரம்பரிய விளையாட்டுக்கு தனி ஒரு மைதானம் இல்லை என்ற அதிர்ச்சிக்கு விடை காண புறப்பட்டுள்ளார் சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் பரிதிவாணன் . அவர் முயற்சியால் புதிய விளையாட்டு தளம் பூச்சோங்கில் உருவாகி வருகிறது.
பண்டைய இந்தியாவில் தோன்றிய பாரம்பரிய குழு விளையாட்டு கபடி, மலேசியாவில், குறிப்பாக இந்திய சமூகத்தினரிடையே, முதன்மையாக தமிழ் மக்களிடையே வலுவாக வளர்ந்தது இன்று தேசிய விளையாட்டு மன்றத்தின் அங்கீகாரத்துடன் மலேசியர்களின் விளையாட்டாக மலர்கிறது.
சுபாங் ஜெயா மாநகர் மன்றம் புதிதாக அங்கீகரித்துள்ள கபடி விளையாட்டு திடலை ஆர்வமுடன் சுத்தப்படுத்தும் விளையாட்டாளர்களுடன் அப்பகுதி இளைஞர்கள்.
இது ஆரம்பத்தில் தோட்டங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களில் முறைசாரா முறையில் விளையாடப்பட்டது, பெரும்பாலும் பொழுதுபோக்கு நடவடிக்கையாக இருந்தது.
வளர்ச்சி மற்றும் அமைப்பு காலப்போக்கில், இந்த விளையாட்டு பிரபலமடைந்து பள்ளிகள், சமூக மையங்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் விளையாடத் தொடங்கியது. மலேசியாவின் கபடி சங்கம் (கேஏஎம்) 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இது விளையாட்டுக்கான அதிகாரப்பூர்வ கட்டமைப்பை வழங்குகிறது.
மலேசியா முழுவதும் போட்டிகள் ஊக்குவிப்பதற்கும், ஏற்பாடு செய்வதற்கு, திறமைகளை வளர்ப்பதற்கும் கேஏஎம் பொறுப்பாகும். கபடி மலேசியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்டது, இது தேசிய அளவிலான விளையாட்டுகளில் சேர்க்கப்படுவதற்கு நிதியைப் பெறுவதற்கும் அனுமதித்தது.
மலேசிய இந்தியர்களிடையே பிரபலமான, இவ் விளையாட்டு தேசிய விளையாட்டு மன்றத்தின் ஈடுபாட்டால் மலாய்க்காரர்கள் மற்றும் சீன மலேசியர்களிடமும் சராவாக் வரை வேரூன்றி வருகிறது.
மலேசியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய கபடி அணிகள் உள்ளன, அவை பிராந்திய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கின்றன, அவற்றுள் பின்வருவன அடங்கும்.
o ஆசிய விளையாட்டுகள் o தெற்காசிய அழைப்பிதழ் போட்டிகள் o உலகக் கோப்பை கபடி
சாதனைகள் மற்றும் அங்கீகாரம் • ஆசிய சுற்றில் உறுதியைக் காட்டிய போட்டி அணிகளை மலேசியா உருவாக்கியுள்ளது. நாடு பல சர்வதேச கபடி நிகழ்வுகளை நடத்தியுள்ளது, இது விளையாட்டின் சுயவிவரத்தை உள்நாட்டில் உயர்த்த உதவியது. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கபடி சேர்க்கவும், அதை இணை பாடத்திட்ட நடவடிக்கைகளில் ஒருங்கிணைக்கவும் முயற்சிகள் உள்ளன.
2024 ம் ஆண்டு பாலியில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் சர்வதேச கபடி சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மலேசிய மகளிர் அணியின் பிரேமகுமாரி.
கபடி விளையாட்டுத் துறையில் சிறப்பாக வளர்ந்து வந்தாலும் அதன் பிரபலம் , கால்பந்து அல்லது பேட்மிண்டன் போன்ற பிரதான விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது முக்கியத்துவம் குறைவாக உள்ளது.
சவால்களில் பின்வருவன அடங்கும்
o வரையறுக்கப்பட்ட ஊடக கவரேஜ்
o பயிற்சிகளுக்கான உள்கட்டமைப்பு குறைபாடு
o பரவலான கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப் இல்லாதது போன்ற காரணங்கள்
இருப்பினும், பாரம்பரியம் மற்றும் இளம் தலைமுறையினரிடம் இவ் விளையாட்டு மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது
இன்றுவரை நிலையான விளையாட்டு மற்றும் பயிற்சி வசதிகள் இல்லாதிருப்பது கபடி வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாகவும், இவ்விளையாட்டின் தேசிய பயிற்சியாளர் விமலநாதன் 40 (வயது) கூறுகிறார்.
அதே வேளையில் 50 ஆண்டுகளுக்கு மேல் இங்கு வாழும் மக்கள் விரும்பி விளையாடும் இந்த விளையாட்டுக்கு ஒரு நிலையான பயிற்சி மற்றும் விளையாட்டு மையம் இல்லாமலிருக்கும் வறட்சியை போக்க சுபாங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் திரு. பரிதிவாணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது என்றார் அவர்.
இப்பொழுது இங்கு அமைக்கப்படவுள்ள கட்டுமானத்தின் வழி நாட்டில் நிலையான கபடி விளையாட்டு மையத்தை ஏற்படுத்திய முதல் மாநகராட்சியாக சுபாங் ஜெயா விளங்குவதைக் காண மகிழ்ச்சியாக இருப்பதாக முயற்சியில் இறங்கியுள்ள பரிதிவாணன் கூறி தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.
மேலும் அவர் அந்த விளையாட்டு மையத்திற்கு இங்கு மேற்கொள்ளப்படும் வசதிகள் கபடி விளையாட்டு க்கு மட்டுமே பயன்படுத்தப்படும், இதன் மேம்பாட்டு பணிகள் முழுமை அடைந்த பின் இந்த வட்டாரத்தில் உள்ள சுமார் 200 கபடி ஆர்வாளர்கள் அதை பயன்படுத்துவதுடன், இப்பகுதியில் உள்ள பள்ளிகளும் இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.
கபடி விளையாட்டு மைதான வசதிகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டும் டத்தோ பண்டார் டத்தோ அமிருள் அசிசான்
ஒரு பாரம்பரிய விளையாட்டு, இப்பொழுது எல்லா இன மலேசியர்களிடமும் பிரசித்தி பெற்று வருகிறது. இந்த விளையாட்டுக்கு ஒரு நிரந்தர விளையாட்டு மையத்தை உருவாக்குவதில் அதிக அக்கறை காட்டி அதற்கான நிலம் மற்றும் ஒதுக்கீடுகள் வழங்கிய சுபாங் ஜெயா மாநகராட்சியின் தலைவருக்கு திரு. பரிதிவாணன் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த விளையாட்டை மேலும் பிரபலமாகவும் , அதிகமான இளைஞர்கள் பங்கு பெற எல்லா நகராண்மை கழகங்களும் குறைந்தது ஒரு கபடி விளையாட்டு மைதானத்தையாவது கொண்டிருக்க வேண்டும். அதன் வழி மேலும் அதிகமான மலேசியர்கள் சர்வதேச அளவில், இவ்விளையாட்டில் பங்கு கொள்ள முடியும் என்றார் அவர்.