ad
ANTARABANGSA

ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீப்பிடித்தது

23 ஜூலை 2025, 5:16 AM
ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீப்பிடித்தது

புது டெல்லி, ஜூலை 23 - ஹோங் கோங்கிலிருந்து புது டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

A1321 அவ்விமானம் 100 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேற்று மாலை புது டெல்லி விமான நிலையம் வந்து இறங்கியது.

விமானத்திலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த போது, அதன் வால் பகுதியின் ஜெனரேட்டரில் திடீரென தீ ஏற்பட்டு புகை வெளியானது.

இதனால், விமானத்தின் சில பாகங்கள் சேதமடைந்தன. ஆனால், பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

முன்னதாக திங்கட்கிழமை மும்பையில் கனமழையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, அதன் இயந்திரங்களில் ஒன்றின் அடிப்பகுதியில் சேதம் ஏற்பட்டது.

கடந்த ஜூன் மாதம் அஹமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானத்திலிருந்த 241 பேர் உட்பட மொத்தம் 275 பேர் பலியாயினர்.

ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்து இதுபோன்ற விபத்துகளில் சிக்குவது பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.