(ஆர்.ராஜா)
கிள்ளான், ஜூலை 21- இங்குள்ள செந்தோசா தமிழ்ப்பள்ளியில் ‘அனாக் சிலாங்கூர், அனாக் சிஹாட்‘ எனும் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
செந்தோசா தொகுதி சேவை மையம் மற்றும் செந்தோசா சுக்கா அமைப்பின் ஆதரவுடன் செல்கேர் அமைப்பு இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கத்தை ஏற்று நடத்தியது.
இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் உடலாரோக்கியம் தொடர்பான சோதனை, ஆரோக்கியமான வாழ்க்கை தொடர்பான விழிப்புணர்வு ஆகிய நிகழ்வுகளோடு மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி உள்ளிட்ட அங்கங்களும் இடம் பெற்றன.
செந்தோசா தொகுதியில் சிறார்கள் மற்றும் சமூகத்தின் உடலாரோக்கியம் மீது தொகுதி சேவை மையம் கொண்டுள்ள அக்கறையை இந்த நிகழ்வு புலப்படுத்துகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய செல்கேர், யுபென் எனப்படும் மாநில திட்டமிடல் பிரிவு, எம்.பி.ஐ., செந்தோசா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கங்கம் உள்ளிட்டத் தரப்பினருக்கு தாம் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.