அம்பாங், மே 31: வணிக வளாகத்தில் விளம்பரங்களை நிறுவுவதற்கான அமலாக்கம் மற்றும் நிபந்தனைகளை மறு ஆய்வு செய்யுமாறு அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (எம். பி. ஏ. ஜே) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அபராதம் RM 1000 வரை விதிக்கப் படுவதைத் தவிர்ப்பதற்காக, விளம்பர நிறுவல் தேவைகள் குழப்பமாக இருக்கும் காரணமாக தெராத்தாய் மாநில சட்டமன்ற உறுப்பினர் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.
"சமீபத்தில், வணிகர்களிடம் இருந்து எங்களுக்கு புகார்கள் வந்தன". வளாகத்திற்குள் அல்லது வெளியே நிறுவப்படும் விளம்பரங்கள் வழிகாட்டியை பின்பற்றாததால் பலர் அபராத நோட்டீஸ்களை பெற்றனர். எந்த அறிவிப்பும் இல்லாமல் அபராதங்களும் விதிக்கப்படுகிறது.
நகராட்சி விதிப்படி (கொள்கை) அனைத்து விளம்பரங்களுக்கும் உரிமம் தேவை, ஆனால் வர்த்தகர்கள் அதை புரிந்து செயல்படுத்துவது எளிதாக்குவதற்கும் பின்னர் விதிமுறைகளுக்கு இணங்குவதற்கும் திருத்தங்களைச் செய்யுமாறு நாங்கள் எம். பி. ஏ. ஜே-வைக் கேட்டுக்கொண்டோம்.
"அதே நேரத்தில், வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே விளக்கமும் அறிவிப்பும் வழங்குமாறு எம். பி. ஏ. ஜே-வை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம், இதனால் அவர்கள் அனுமதிகளை நிர்வகிக்க முடியும்" என்று மீடியா சிலாங்கூருக்கு யூ ஜியா ஹவர் கூறினார்.
முன்னதாக, டிராகன் படகு விழா வுடன் இணைந்து 200 பாரம்பரிய சீன கேக்குகள், சாங் கேக்குகளை இங்குள்ள சன்பீம்ஸ் ஹோம் அறக்கட்டளையிடம் அவர் வழங்கினார்.
அங்குள்ள 100 அனாதைகளுக்கு பெருநாள் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கான இந்த நன்கொடை 2022 முதல் நான்காவது ஆண்டாக நடைபெறுவதாக ஜியா ஹோர் விளக்கினார்.