வசூலிப்புத் திட்டத்திற்காக சிறப்பு ஒட்டு வில்லைகளை (ஸ்டிக்கர்) சுபாங்
ஜெயா மாநகர் மன்றம் அடுத்தாண்டு தொடங்கி அறிமுகப்படுத்தவுள்ளது.
நெகிழிப்பைகளுக்கு கட்டணம் வசூலிப்பது போன்ற மோசடி
நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் இந்த திட்டம்
அமல்படுத்தப்படுவதாக சுபாங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ அமிருள்
அஜிசான் அப்துல் ரஹிம் கூறினார்.
நெகிழிப் பைகளுக்கு விதிக்கப்படும் கட்டணம் மூலம் சுபாங் ஜெயா மாநகர்
மன்றம் கடந்த நவம்பர் மாதம் வரை 10 லட்சம் வெள்ளிக்கும் மேல்
வசூலித்துள்ளது. இந்த நிதி பல பசுமைத் திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல்
பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.
எனினும், மாநகர் மன்றத்தில் பதிவு பெறாமல் சட்டவிரோதமான
முறையில் நெகிழிப்பைகளுக்கு கட்டணம் விதிக்கும் செயலில் சில
வர்த்தக வளாகங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்று அவர்
தெரிவித்தார்.
இத்தகைய மோசடி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இந்த சிறப்பு
ஒட்டு வில்லைத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதோடு அடுத்தாண்டு
தொடங்கி அது அமல்படுத்தப்படும். இதன் மூலம் நெகிழிப்பைகளுக்கு
கட்டணம் வசூலிப்பதற்கான உரிய பதிவைக் கொண்டிருக்கும் வர்த்தக
வளாகங்களை பொது மக்கள் அடையாளம் காண இயலும் என்றார் அவர்.
தொடங்கப்படும் எனக் கூறிய அவர், பதிவு பெற்ற வர்த்தக
வளாகங்களுக்கு அவை இலவசமாக வழங்கப்படும் என்றார்.
இதனிடையே, டிசம்பர் 8 முதல் 14 வரையிலான 50வது நோய்த் தொற்று
வாரத்தில் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட
பகுதிகளில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 1.3 விழுக்காடு குறைந்து 99
சம்பவங்களாகப் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.