MEDIA STATEMENT

சிலாங்கூர் பேணிக்காப்பு பொருளாதார முன் வரைவு அடுத்த மாதம் தாக்கல்

30 அக்டோபர் 2024, 2:35 PM
சிலாங்கூர் பேணிக்காப்பு பொருளாதார முன் வரைவு அடுத்த மாதம் தாக்கல்

ஷா ஆலம், அக் 30 - சிலாங்கூர் பேணிக்காப்பு  பொருளாதாரக் கொள்கையின் முன் வரைவு வரும் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஒரு தீர்மானமாக  முன்வைக்கப்படும்.

2024 முதல் 2030 வரைக்குமான இந்த கொள்கை முன் வரைவு இன்று சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதாக என்று பெண்கள் ஆக்கத் திறனளிப்பு மற்றும் சமூக நலன் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி தெரிவித்தார்.

நாங்கள் அதனை (மாநில சட்டமன்றத்தில்) முன்வைத்து விவாதிப்போம். இந்த பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது மேல் கூறப்பட்ட  காலத்திற்கு கொள்கையாக நடைமுறைப்படுத்தப்படும்  என்று அவர் கூறினார்.

வயதான தேசத்தின் சவால்களை எதிர்கொள்வதையும் சமூக நலனை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட கொள்கை, சிறந்த பராமரிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் ஐந்து தூண்கள் மற்றும் 37 செயல் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது என்று அவர்  குறிப்பிட்டார்.

இந்த தூண்கள் வலிமைப் படுத்துதல், மற்றும் பதவி உயர்வு, நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை, பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர்கள் மற்றும் கவனிப்பாளர்கள், ஒத்துழைப்பு மற்றும் முதலீடு, அத்துடன் தரவுகளை உள்ளடக்கியதாகக் கூறிய அவர்,  அவை கட்டங் கட்டமாக   செயல்படுத்தப்படும் என்றார்.

பட்டியலிடப்பட்ட செயல் திட்டங்களில் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கக்கூடிய   பங்குதாரர்களைக் கொண்டுள்ளன. வரும் ஆறு ஆண்டுகளில் முதல் கட்டம் 2024 முதல் 2026 வரையிலும், இரண்டாவது கட்டம் 2027 முதல் 2030 வரையிலும் நடைபெறும் என்று அவர் கூறினார்.

நலன் சார்ந்த அம்சங்கள் தவிர்த்து பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றோடு  பெண்களுக்கு வருமான வாய்ப்புகளை உருவாக்குவதையும் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.