MEDIA STATEMENT

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட பிரதமர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

30 அக்டோபர் 2024, 10:24 AM
தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட பிரதமர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

கோலாலம்பூர், அக்டோபர் 30: தீபாவளி பண்டிகையை  இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல்  நாடு முழுவதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட மலேசியர்களை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அழைக்கிறார்.

பிரதமர் அனைத்து அரசு இயந்திரங்களையும் மக்களையும் பிரதிநிதித்து, இந்நாட்டு இந்துக்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

விளக்குகளின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி நாளை கொண்டாடத்தை  பிரதமர் தனது முகநூல் பதிவில் வரவேற்றார்,  தீபாவளி மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் 'ஒளியின் திருவிழாவாக' கொண்டாடப்படுகிறது, இது இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி, தீமைக்கு எதிரான நன்மை மற்றும் அறியாமை மற்றும் ஆணவத்திற்கு எதிரான அறிவின் சக்தியை குறிக்கிறது.

"கலாச்சாரம் நிறைந்த சமூகமாக நாம் சமூகங்களிடையே மரியாதையையும் புரிதலையும் வளர்க்க வேண்டும்".

"இனங்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கும், பொதுவான நிலையைக் கண்டறிவதற்கும், வறுமை மற்றும் கஷ்டங்களில் வசிப்பவர்களுக்கு கருணை காட்டுவதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள்" என்று அவர் கூறினார்.

ஒட்டுமொத்த மக்கள் இயக்கத்தின் கண்ணியத்தை உயர்த்துவதற்காக, இந்த தீபாவளி கொண்டாட்டத்தை புதிய மற்றும் தூய்மையான அறிவுசார் மறுமலர்ச்சியின் உணர்வுடன் குறிக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.