MEDIA STATEMENT

கோத்தா கெமுனிங் தொகுதியின் தீபாவளி உபசரிப்பு- இன்று ஸ்ரீமூடாவில் நடைபெறுகிறது

25 அக்டோபர் 2024, 7:35 AM
கோத்தா கெமுனிங் தொகுதியின் தீபாவளி உபசரிப்பு- இன்று ஸ்ரீமூடாவில் நடைபெறுகிறது

ஷா ஆலம், அக். 25– கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பு இன்று 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா மைடின் கார் பேரங்காடியின் நிறுத்துமிடத்தில் மாலை மணி 7.00 முதல் இரவு 10.00 வரை இந்த நிகழ்வு நடைபெறும்.

இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பாரம்பரிய நடனம், பாடல் உள்பட பல்வேறு அங்கங்கள் இடம்பெறும்.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதியை சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்வதுடன் தொடர்ந்து நடைபெறும் தீபாவளி விருந்திலும் கலந்து கொள்ளும்படி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கேட்டுக் கொள்கிறார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.