புத்ராஜெயா, அக். 25- ஒரு கிலோ எடை கொண்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு தெலுக் பங்ளிமா காராங்கில் உள்ள வர்த்தக வளாகம் மீது கடந்த 21ஆம் தேதி சோதனை நடத்தியது.
அப்பொருட்களை வர்த்தகர் ஒருவர் அகற்றுவதைச் சித்தரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சோதனையை தாங்கள் மேற்கொண்டதாக அமைச்சின் அமலாக்கப் பிரிவுத் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடாம் ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளில் சர்க்கரை, சமையல் எண்ணெய், மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், மற்ற மளிகைப் பொருட்கள் 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் சில்லறை விற்பனை உரிமம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இச்சோதனையில் ஒரு கிலோ எடை கொண்ட 84 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள், 7 போத்தல் 2 கிலோ சமையல் எண்ணெய், 14 கிலோ எடையிலான 8 எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் 24 கிலோ வெள்ளை சர்க்கரை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், விற்பனை விலைப்பட்டியல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் கொள்முதல் தொடர்பான ரசீதுகள் உள்பட பல வணிக ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
அமலாக்கத் தரப்பினர் அனைத்து பொருட்களையும் வர்த்தக ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு 630.90 வெள்ளியாகும். மேலும் வளாகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விநியோகிப்பாளர்கள் மற்றும் அவற்றின் விநியோக சங்கிலியை அடையாளம் காண 122 வது சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதற்கிடையில், கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஓப் திரிஸ் 3.0 சோதனை நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்
- பெர்னாமா








