MEDIA STATEMENT

30 ஆண்டுகளாக நீடித்து வந்த திடீர் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு

24 அக்டோபர் 2024, 1:13 PM
30 ஆண்டுகளாக நீடித்து வந்த திடீர் வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு

ஷா ஆலம், அக்.24: தெரத்தாய் தொகுதியில் உள்ள தாமான் மூடாவில் சுமார் 30

ஆண்டுகளாக நீடித்து வந்த திடீர் வெள்ளப் பிரச்சனை கால்வாய் அமைப்பு

மேம்படுத்தப்பட்டதால்  விடிவு  ஏற்பட்டது .

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தான் வெளியிட்ட

கொள்கையறிக்கையின் ஒரு பகுதியே இந்த திட்டம் என்று சட்டமன்ற உறுப்பினர் யூ

ஜியா ஹவுர் கூறினார்.

வெள்ளப் பிரச்சனை இன்னும் இருந்தாலும், சுமார் RM3 மில்லியன் செலவில்

கால்வாய் அமைப்பை  அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்  மேம்படுத்திய பின்  அதன் பாதிப்பு குறைந்துள்ளது, என்று அவர் கூறினார்.

நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய் துறையால் ஆய்வு செய்யப்பட்டு ரிங்கிட் 18 மில்லியன்

செலவில் கம்போங் தாசிக் பெர்மாயில் கால்வாய் அமைப்பை மேம்படுத்தும் பணி

மேற்கொள்ளப்படுவதாக ஜியா ஹவுர் கூறினார்.

இதுபோன்ற பணிகளால், பல வெள்ளப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்,

என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.