NATIONAL

இலவச குடிநீரைப் பெற டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

22 அக்டோபர் 2024, 10:40 AM
இலவச குடிநீரைப் பெற டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோம்பாக் அக் 22: இலவச குடிநீரைப் பெற டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்கு (SADE) விண்ணப்பிக்குமாறு மாநில அரசு பொது மக்களூக்கு அழைப்பு விடுத்துள்ளது.இத்திட்டம் 600,000 கணக்குகளை இலக்காகக் கொண்டுள்ளது.

சிலாங்கூரில் வசிக்கும் அல்லது வாடகைக்கு தங்கி இருக்கும் குடிமக்களுக்கான இச்சிறப்பு திட்டம், RM5,000க்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்டிருக்க வேண்டும் என நிபந்தனையுடன் ஆண்டு முழுவதும் செயல்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"நாங்கள் இத் திட்டத்தை தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் பதிவை நீட்டித்து வருகிறோம். ஆனால், சில பேருக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இன்னும் தெரியவில்லை.

மேலும், தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்கள் பெங்குருசான் ஆயர் சிலாங்கூரிடம் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், இத்திட்டத்திற்கான தகுதித் தேவைகளை மேலும் தளர்த்த மாநில அரசு விரும்பவில்லை என்றும் அமிருடின் மேலும் கூறினார்.

மாதத்திற்கு 20 கன மீட்டர் இலவச குடிநீர் வழங்கும் இத்திட்டத்தில் யாரும் விண்ணப்பிக்காமல் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தகுதியான குடியிருப்பாளர்களை கண்டறிய சமூகத் தலைவர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.