MEDIA STATEMENT

தீபாவளியை முன்னிட்டு பத்து தீகா தொகுதியில்  ஆட்டு இறைச்சியும் சிறப்பு ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில்

20 அக்டோபர் 2024, 5:37 AM
தீபாவளியை முன்னிட்டு பத்து தீகா தொகுதியில்  ஆட்டு  இறைச்சியும்  சிறப்பு ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையில்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், அக். 20-  இம்மாதம் இறுதியில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு  சிறப்பு ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைக்கு பத்து தீகா சட்டமன்றத் தொகுதி ஏற்பாடு செய்துள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் இந்த  மலிவு விற்பனை   நாளை 21ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பாடாங் ஜாவா, ரிம்பா  ஜெயா ஷா ஆலம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் நடைபெறும்.

இந்த விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும்  5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி  13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு  இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைக்கு பிரத்தியேகமாக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்து தீகா தொகுதி இந்திய சமூகத் தலைவர் பி. சதாசிவம் கூறினார்.

இந்த மலிவு விற்பனையில் தீபாவளியைக் கொண்டாடுவோரின்  தேவையை நிறைவு செய்யும்  வகையில் ஆட்டிறைச்சி பிரத்தியேகமாக விற்பனைக்கு வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பொருள்களை மலிவான விலையில் வாங்கிக் கொள்ளும்படி சுற்றுவட்டார மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். முகநூல் வழி மற்றும் விற்பனைச் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது http://linktr.ee/myPKPS இணைப்பின் மூலமாகவும் சரிபார்க்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.