கோலாலம்பூர், அக். 18- வரும் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்
கீழ் 48 ரெசிடென்சி ராக்யாட் (பி.ஆர்.ஆர்.) திட்டங்கள் மற்றும் 14 மக்கள்
நட்புறவு வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் சுமார் 9/
கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
போர்ட்டிக்சன் மற்றும் செபராங் பிறை தெங்காவில் இரு புதிய பி.ஆர்.ஆர்.
வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
இந்த பி.ஆர்.ஆர். திட்டங்கள் வரும் 2025 ஆம் ஆண்டு முற்றுப் பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டங்களின் வழி 17,500 பேர் குடியிருப்புகளைப்
பெறுவர் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பழைய மலிவு விலை மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி
குடியிருப்புகளில் லிப்டுகளை மாற்றுவது உள்ளிட்ட பழுதுபார்ப்பு
பணிகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 20 கோடி வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர, 48 மடாணி பொழுதுபோக்கு பூங்காக்கள் தரம் உயர்த்தப்படும்.
இந்நோக்கத்திற்காக 10 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர்
சொன்னார்.
சீன புதுக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் சமூக வசதிகளை
மேம்படுத்த 84 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.








