ANTARABANGSA

வியந்தியானில் ஆசியான் உச்சநிலை மாநாடு- பிரதமர் தலைமையில் பேராளர் குழு பங்கேற்பு

8 அக்டோபர் 2024, 5:24 AM
வியந்தியானில் ஆசியான் உச்சநிலை மாநாடு- பிரதமர் தலைமையில் பேராளர் குழு பங்கேற்பு

வியந்தியான், அக். 8- லாவோஸ் நாட்டின் வியந்தியானில் இன்று

தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11ஆம் தேதி) வரை

நடைபெறவிருக்கும் 44 மற்றும் 45 வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய மாநாடுகளில் பங்கேற்கும் மலேசிய பேராளர்  குழுவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்பார் என்று வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) தெரிவித்தது.

ஆசியான் உச்சநிலை மாநாடு தவிர்த்து ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான்,  இந்தியா, தென்கொரியா, அமெரிக்கா, கனடா ஆகிய ஏழு கலந்துரையாடல் பங்காளி நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் பிளஸ் ஓன் மாநாடு, பிளாஸ்  மூன்று மாநாடு        ஆகியவற்றோடு  கிழக்காசிய மாநாடு மற்றும் ஆசியான்- அமெரிக்க மாநாடு ஆகியவற்றிலும் மலேசியா பங்கு கொள்ளும்.

கூடுதலாக ஆசியான் சுழியம் கார்பன் உமிழ்வு சமூகத் தலைவர்கள்  கூட்டம், ஆசியான் தலைவர்கள் இடைமுக அமர்வு மற்றும் ஆசியான்  இடையிலான நாடாளுமன்ற பேரவை, ஆசியான் வர்த்தக கலந்தாய்வு  மற்றும் ஆசியான் இளைஞர்கள் கலந்தாய்வு நிகழ்வுகளிலும் பிரதமர்   கலந்து கொள்வார் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த 44 மற்றும் 45வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன்  தொடர்புடைய மாநாடுகள், பல்வேறு விவகாரங்களில் மலேசிய தனது   கண்ணோட்டத்தையும் கருத்தையும் பகிர்ந்து கொள்வதற்குரிய தளமாக  விளங்கும்.

இந்த மாநாடுகளின் போது தென்சீனக் கடல் விவகாரத்தின் தனது  நிலைப்பாடு, மியன்மார், பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கின் மேம்பாடுகள் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மலேசியா  எடுத்துரைக்கும் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இந்த 44 மற்றும் 45வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய மாநாடுகள் முடிவுக்கு வரும் போது, அந்த அமைப்பின்  நடப்புத் தலைவரான லாவோஸ் அந்த பதவியை மலேசியாவிடம் ஒப்படைக்கும் அடையாள நிகழ்வும் இடம் பெறும். வரும் 2025ஆம் ஆண்டு    ஜனவரி முதல் தேதி ஆசியான் தலைவர் பதவியை மலேசியா ஏற்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.