MEDIA STATEMENT

பெட்டாலிங், கோம்பாக், கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,968 பேர் ஆறு தற்காலிக தங்குமிடங்களில்  தஞ்சமடைந்துள்ளனர்.

4 அக்டோபர் 2024, 3:36 AM
பெட்டாலிங், கோம்பாக், கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,968 பேர் ஆறு தற்காலிக தங்குமிடங்களில்  தஞ்சமடைந்துள்ளனர்.

ஷா ஆலம், 4 அக்: நேற்றிரவு நிலவரப்படி, மூன்று மாவட்டங்களை தாக்கிய வெள்ளத்தைத் தொடர்ந்து 480 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,968 பாதிக்கப்பட்டவர்கள் ஆறு தற்காலிக தங்குமிடங்களுக்கு (பிபிஎஸ்) மாற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகள் பெட்டாலிங், கோம்பாக் மற்றும் கோலா சிலாங்கூர் என்று சிலாங்கூரில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல் பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் கூறினார்.

"வெள்ள மீட்பு நடவடிக்கைக்கு அவ்விடங்களுக்கு சென்ற தீயணைப்பு படையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்," என்று ஹரியான் மெட்ரோ அறிக்கையின்படி அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.

இப்போது திறந்திருக்கும் ஆறு பிபிஎஸ் கள்:

· டேவான் எம்பிஎஸ்ஏ செரி பாகி, பாயா ஜெராஸ் மண்டபம்

· டேவான் MBSA பூங்கா மாத்தாஹரி

· டேவான் எம்பிஎஸ்  ஸ்ரீ குண்டாங்

· குவாங் சமய ஆரம்ப பள்ளி

.அமான் கிராம தேசிய பள்ளி

அஹ்மத் முக்லிஸின்  மேலும் கூறுகையில் , சுங்கை பூலோ, பெஸ்தாரி ஜெயா, செலாயாங், பத்து ஆராங், புக்கிட் ஜெலுத்தோங் மற்றும் டெங்கில் ஆகிய ஆறு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து மொத்தம் 54 உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

"ஜேபிபிஎம் குவாங்கில் கம்போங் குபு கஜா, மெர்பாவ் செம்பா, கம்போங் செம்பெடாக் உட்பட 21 வெள்ள ஆபத்து நிறைந்த இடங்களில் கண்காணிப்பை மேற்கொண்டது; கம்போங் மெலாயு சுபாங், மற்றும் ஜாலான் தெம்புசு, சுபாங்.

"கோலா சிலாங்கூரில்  கம்போங் ஸ்ரீ அமான், தாமன் சௌஜானா அமான், கம்போங் பாரிட் மஹாங் ஆகியவைத் தவிர; சுங்கை புவா, தொழிற்கல்வி பள்ளி பாலம், பசுமைப் புரட்சி மற்றும் சிப்பாங்கில் உள்ள டெங்கில் சந்தை.

"கம்போங் செலாயாங் பாரு, கம்போங் லக்சமனா, செலாயாங்கில் உள்ள இந்திய குடியேற்றம், தாமான் ரஹ்மத் ஜெய குண்டாங், லோரோங் உத்தாமா 1, லோராங் செடியா 7, கம்போங் மெலாயு ஸ்ரீ குண்டாங், லோரோங் ஹாஜி தாலிப், கம்போங் கோம்பாக் மற்றும் கம்போங் பூங்கா ராயா ஆகிய இடங்களும் கண்காணிக்கப்படுகின்றன" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிலாங்கூரில் தற்போது வடகிழக்கு பருவமழையின் நிலைமாறும் கட்டத்தை அனுபவித்து வருவதால்  வெள்ளம் ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ள இடங்களில் வாழும்  அனைத்து தரப்பினரும் தயாராக இருக்குமாறு டத்தோ மந்திரி புசார் கேட்டுக் கொண்டார்.

கோம்பாக்கின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுங்கை துவா மாநில சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு நேற்றிரவு விரைந்ததாகத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.