MEDIA STATEMENT

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன் ஏற்பாடுகள் - சுபாங் ஜெயா மாநகராட்சி

4 அக்டோபர் 2024, 2:33 AM
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன் ஏற்பாடுகள் - சுபாங் ஜெயா மாநகராட்சி

சுபாங் ஜெயா, 4 அக்: வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள சுபாங் ஜெயா மாநகராட்சி

பல முன் ஏற்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துகிறது.

லைஃப் படகுகள், நான்கு சக்கர வாகனங்கள், லாரிகள், வேன்கள், பேருந்துகள் மற்றும்

ரோரோ லாரிகள் உட்பட 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

என அதன் துணை மேயர் சுல்குர்னைன் சே அலி கூறினார்.

லைஃப் படகுகள், கூடாரங்கள் மற்றும் தற்காலிக வெளியேற்ற மையம் (பிபிஎஸ்)

உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை எம்பிஎஸ்ஜே சரிபார்த்து வருவதாக அவர்

தெரிவித்தார்.

சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள பள்ளிகள், மசூதிகள், பல்நோக்கு மண்டபங்கள்

ஆகியவற்றை உள்ளடக்கிய 60 தற்காலிக தங்கும் மையங்கள் இதுவரை அடையாளம்

காணப்பட்டுள்ளன.

 மேலும், பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் பேரிடர் தொடர்பான

விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம், என்று அவர்

கூறினார்.

ஏதேனும் அவசர புகார்கள் அல்லது உடனடி உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள்

எம்பிஎஸ்ஜே அழைப்பு மையம் / PANTAS குழுவை 03-8024 7700 என்ற எண்ணில்

தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.