MEDIA STATEMENT

அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தால் எட்டு டன்களுக்கும் அதிகமான குப்பைகள்  சேகரிக்கப்பட்டன

2 அக்டோபர் 2024, 10:19 AM
அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தால் எட்டு டன்களுக்கும் அதிகமான குப்பைகள்  சேகரிக்கப்பட்டன

ஷா ஆலம், அக். 1: அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தால் (எம்பிஏ ஜே) கம்போங் ஃபஜர், உலு கெலாங் மற்றும் தாமான் புக்கிட் இண்டா வாசா 2 ஆகிய இடங்களில் எட்டு டன்களுக்கு அதிகமான குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

அதில்  0.21 டன் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் ஆகும் என எம்பி ஏஜே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் சுற்றுச் சூழலின் தூய்மையை பராமரிப்பதில் பொறுப்புடன், குறிப்பாக  குடியிருப்பு பகுதிகளில் சமூக விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன்   மேற்கொள்ளப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் லெம்பா ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் சையட் அஹ்மட் சையத்  அப்துட் ரஹ்மான் அல்-ஹட்டாட், உலு கிளாங் மாநில சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்

ஜுவைரியா சுல்கிப்லி மற்றும் எம்பிஏ ஜே தலைவர் டாக்டர் அனி அஹமட் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மேலும், தாமான் புக்கிட் இண்டா வாசா 2இல் வசிப்பவர்கள், அம்பாங் சமூகக் கல்லூரி   தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனமான அரிஃப் சிலாங்கூர், மின்கன்சல்ட் நிறுவனம்

மற்றும் மண்டலத்தில் உள்ள 9 குடியிருப்பாளர் குழு   உறுப்பினர்களும்    இதில் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.