NATIONAL

கெடாவில் வெள்ளம் தணிகிறது - பேராக் மாநிலத்தில் நிலைமையில் மாற்றமில்லை 

2 அக்டோபர் 2024, 4:48 AM
கெடாவில் வெள்ளம் தணிகிறது - பேராக் மாநிலத்தில் நிலைமையில் மாற்றமில்லை 

கோலாலம்பூர், அக். 2- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கெடா

மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 212

குடும்பங்களைச் சேர்ந்த 633 பேராக உள்ளது. நேற்றிரவு 268

குடும்பங்களைச் சேர்ந்த 840 பேர் வெள்ள நிவாரண மையங்களில்

தங்கியிருந்தனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள

பத்து தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக

சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அறிக்கை கூறியது.

கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 86

குடும்பங்களைச் சேர்ந்த 276 பேர் பத்து துயர் துடைப்பு மையங்களில்

தங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பாலிங் மாவட்டத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 247

பேரும் பொக்கோ செனா மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 110

பேரும் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இதனிடையே, மூன்று ஆறுகளில் நீர் மட்டும் உயர்வு கண்டு வருவதாக

மாநில வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையின் வெள்ளத் தகவல்

அகப்பக்கம் கூறியது.

சுங்கை அனாக் புக்கிட் ஆற்றின் தாமான் அமான் பகுதி மற்றும்

ஜம்பத்தான் தார் பகுதியில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ள

வேளையில் கெடா ஆற்றின் நெடுஞ்சாலை பாலத்தில் நீர் மட்டம்

எச்சரிக்கை அளவில் உள்ளது.

இதனிடையே, பேராக் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக ஐந்து

குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் நிவாரண மையங்களில் தங்க

வைக்கப்பட்ட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் டத்தோ அஸ்மான் மஹாலான் சமூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.