கோலாலம்பூர், செப் 30: பள்ளி அளவில் ட்ரோன் தொழில்நுட்ப கற்றல் திட்டத்தை செயல்படுத்த எம்பிஐ RM20,000 வழங்கியுள்ளது. .
இது காஜாங் மற்றும் செராசில்ல உள்ள நான்கு பள்ளிகளுக்கு தொழில்நுட்பக் கருவிகள் வாங்குதல், பயிற்சி மற்றும் கற்றல் ஆகியவற்றுக்கான நிதியை உள்ளடக்கியது என எம்பிஐ அறக்கட்டளையின் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.
அவை ஶ்ரீ ஜெலோக் தேசியப்பபள்ளி, செரஸ் ஜெயா தேசியப்பள்ளி மற்றும் ஜாலான் ரெகோ இடைநிலைப் பள்ளி மற்றும் பண்டார் ஶ்ரீ புத்ரா இடைநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் ஆகும்.
"எம்பிஐ அறக்கட்டளை ட்ரோன்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த விரும்புகிறது, அவை பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமல்லாமல் உணவு விநியோகம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்ற வேலைவாய்ப்புத் துறைகளிலும் விரிவடைந்து வருகின்றன," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அக்கற்றல் தொகுதி விதிமுறைகள், பாதுகாப்பு கூறுகள், கட்டுப்பாடுகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் உள்ள பயன் பாடுகளையும் உள்ளடக்கியது என, ``Meraque`` தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ரசாலி இஸ்மாயில் மேலும் கருத்து தெரிவித்தார்.








