MEDIA STATEMENT

மேலும் 155  சந்தேக நபர்கள் பிடிபட்டனர், 186 பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்

22 செப்டெம்பர் 2024, 3:45 AM
மேலும் 155  சந்தேக நபர்கள் பிடிபட்டனர், 186 பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்

கோலாலம்பூர், செப் 22 - சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் ஜிஐஎஸ்பி ஹோல்டிங்ஸ் உறுப்பினர் ஒருவரால் சாட்டையால் அடிக்கப்படும் ஒரு சிறுவன் தொடர்பாக  மேற்கொள்ளப்பட்ட '' ஒப் குளோபல் ஃபேஸ் 4''ன் வழி  நேற்று மீட்கப்பட்ட 186 பேரில் அடங்குவார்.

தீபகற்பத்தில்  உள்ள 82 வளாகங்களில் ஒரே நேரத்தில் 102 சிறுவர்கள் மற்றும் 84 சிறுமிகள் அடங்கிய குழுவை மீட்கும் நடவடிக்கை அதிகாலை சோதனையின்  போது  நடைபெற்றதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீஸ் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் கூறினார்.

நலன்புரி இல்லங்கள், வணிக வளாகங்கள், கிளினிக்குகள், மதப் பள்ளிகள் மற்றும் தனியார் வீடுகள் உள்ளிட்ட GISB- புடன் தொடர்பு படுத்தப்பட்ட வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 155 சந்தேக நபர்கள் - 78 ஆண்கள் மற்றும் 77 பெண்கள் - கைது செய்யப் பட்டதாக அவர் கூறினார்.

GISB உடன் தொடர்புடைய மீதமுள்ள உறுப்பினர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதில் 801 பணியாளர்கள் உள்ளனர்.

சுகாதார அமைச்சகம், சமூக நலத்துறை, இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, வேதியியல் துறை மற்றும் தேசியப் பதிவுத் துறை  துணையுடன்  மேற்கள்ளப்பட்ட நடவடிக்கையில்  2,528 ராயல் மலேசியா காவல்துறை மற்றும் 1,273 அரசு நிறுவன ஊழியர்கள் இருந்தனர்   என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது, உண்மையான இஸ்லாமிய போதனைகளுக்கு முரணான தகவல்கள் அடங்கிய பல துண்டு பிரசுரங்களை போலீசார் கைப்பற்றியதாக ரஸாருதீன் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1) மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு சட்டம் 2007 பிரிவு 14 ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

சோதனையின் போது, சில வளாகங்கள் காலியாக இருந்ததாகவும், நிறுவனத்துடன் தொடர்புடைய வளாகங்களில் முந்தைய போலீஸ் சோதனைகளுக்குப் பிறகு GISB உறுப்பினர்கள் தப்பிச் சென்றதாக நம்ப படுவதாகவும் ரஸாருதீன் கூறினார்.

இதற்கிடையில், ஜிஐஎஸ்பியால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வழக்கு தொடர்பான தகவல்களுடன் விசாரணைக்கு உதவ முன்வருமாறு ரஸாருதீன் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.