ANTARABANGSA

சபாவில் சிறப்பு மலேசிய தினக் கொண்டாட்டம்- அமைச்சர் ஃபஹ்மி கோடி காட்டினார்

15 செப்டெம்பர் 2024, 4:16 AM
சபாவில் சிறப்பு மலேசிய தினக் கொண்டாட்டம்- அமைச்சர் ஃபஹ்மி கோடி காட்டினார்

கோத்தா கினாபாலு, செப். 15 - இங்குள்ள பாடாங் மெர்டேக்காவில் நாளை நடைபெறவிருக்கும்  மலேசியா தினக் கொண்டாட்டம்  பல்வேறு  சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் "மிகவும் சிறப்பு வாய்ந்ததாக" இருக்கும் என்று  தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

இந்நிகழ்வில் பல சீரமைப்புகள்  2024  தேசிய தினம் மற்றும் மலேசியா தினம்  கொண்டாட்ட முதன்மைக் குழுத் தலைவரான ஃபாஹ்மி சொனனார்.

இந்த கொண்டாட்டம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக பங்கேற்பாளர்களிடமிருந்து நாங்கள் கருத்துகளைப் பெற்ற பிறகு ஆடியோ குறைபாடுகள் உட்பட சில சிக்கல்கள் கவனிக்கப்படும் என்று அவர் நேற்று இரவு பாடாங் மெர்டேக்காவில் நடைபெற்ற நிகழ்வின் முழு ஒத்திகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வரலாற்று நிகழ்வில் மலேசியா தினத்தை கொண்டாடும் வகையில் சிறந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகளை நாங்கள்  படைக்கவுள்ளோம் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில்,  நாளை நடைபெறும்  கொண்டாட்டத்தில் பங்கேற்க அனைவரையும்  பாடாங் மெர்டேகாவுக்கு அழைக்கிறோம்  என்று சபா  மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோ கிறிஸ்டினா லியூ தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.