ஷா ஆலம், செப் 5: ஷா ஆலம் செக்ஷன் 7இல் உள்ள ஏரியில் காணப்பட்ட 1.5 மீட்டர் நீளமுள்ள முதலை நேற்றிரவு 10.30 மணியளவில் பிடிபட்டது.
இந்த விஷயத்தை ஷா ஆலம் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் உறுதிப்படுத்தினார்.
"குறிப்பிட்ட ஏரியில் காணபட்ட முதலை வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டது. அதாவது சிலாங்கூர் வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் தேசியவனவிலங்கு பாதுகாப்பு பூங்கா (பெர்ஹிலிடன்) நிறுவிய வலையில் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் சிக்கியது" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
இதற்கிடையில், சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமியும் X பக்கத்தில் பிடிபட்ட முதலையின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.








