MEDIA STATEMENT

பொதுச் சேவை சீர்திருத்தத்தை  உடனடியாக அமல்படுத்த வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

2 செப்டெம்பர் 2024, 10:02 AM
பொதுச் சேவை சீர்திருத்தத்தை  உடனடியாக அமல்படுத்த வேண்டும்- பிரதமர் வலியுறுத்து

புத்ராஜெயா, செப். 2 - பொதுச் சேவை சீர்திருத்த நடவடிக்கைகள்  உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செப்டம்பர் மிகவும் தீவிரமான சீர்திருத்த நடவடிக்கைகளின் மாதமாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறினார்.

ஏற்கனவே பாராட்டத்தக்கவகையில் உள்ள  செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து  அரசாங்கத்  தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் மற்றும் பொதுச் சேவைத் துறை  தலைமை இயக்குநர்  டத்தோஸ்ரீ வான் அகமது டஹ்லான் அப்துல் அஜிஸ் ஆகியோருடன் நான் விவாதிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில்   கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில்  துணைப் பிரதமர்களான  டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.