ஷா ஆலம் ஆகஸ்ட் 17: இன்று எம்பிஜே பொது மண்டபம், பண்டான் இண்டாவில் நடைபெறும் ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தையில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வருகையாளருக்கு சமீபத்திய வேலை காலியிடங்கள் குறித்த முகப்பிடங்களை திறக்க உள்ளதாகச் சிலாங்கூர் தொழிலாளர் பிரிவு (யூபிபிஎஸ்) தெரிவித்தது.

அதில் 99 ஸ்பிட்மார்ட் , பெகர் கிங், கிளினிக் அஸ்-சலாம், கேகே மார்ட், டோப் குளோவ் மற்றும் கோவ்வி போர்ட் ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.
“ இன்றைய ஜோப்கேர் வேலைவாய்ப்பு கண்காட்சிக்கு மனித வள துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு வருகை புரிந்தார் “இத்திட்டம் வேலை தேடுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பொது மக்களிடையே வேலை வாய்ப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும். மேலும், குறிப்பிட்ட நாள் முழுவதும் வேலைக்கான நேர்காணல் அமர்வுகள் நடைபெறும்.

பணியமர்த்தல் செயல்முறையை விரைவுபடுத்துவது மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் உடனடியாக நேர்காணல்களில் பங்கு கொண்டு, வேலை வாய்ப்புகளை ஏற்க தயாராக தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும், தகவலுக்கு, 019-3612264 (கைரியா) அல்லது 019-2969846 (ஹாசான்) என்ற கைப்பேசி எண் மூலம் தொடர்பு கொள்ளவும்.








