MEDIA STATEMENT

வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப்பள்ளிக்கு டிஜிட்டல் நூலகம்- கோரிக்கையை பரிசீலிக்க பாப்பா ராய்டு வாக்குறுதி

14 ஆகஸ்ட் 2024, 10:39 AM
வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப்பள்ளிக்கு டிஜிட்டல் நூலகம்- கோரிக்கையை பரிசீலிக்க பாப்பா ராய்டு வாக்குறுதி
வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப்பள்ளிக்கு டிஜிட்டல் நூலகம்- கோரிக்கையை பரிசீலிக்க பாப்பா ராய்டு வாக்குறுதி

காஜாங், ஆக 14- உலு லங்காட் மாவட்டத்தில் மிகப்பெரிய தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் காஜாங் வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப்பள்ளிக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்க உதவும்படி பள்ளி நிர்வாகம் விடுத்த கோரிக்கையை பரிசீலிக்க தாம் தயாராக உள்ளதாக

மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

தற்போதைய தகவல் தொழில் நுடப் யுகத்தில் டிஜிட்டல் நூலகம் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குவதால் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது என்று அவர் சொன்னார்.

இப்பள்ளியில் டிஜிட்டல் நூலகம் நிறுவப்பட வேண்டும் என்ற விருப்பத்தை பள்ளி தலைமையாசியர் வெளிப்படுத்தினார். எனது ஆசையும் அதுதான்.  இதன் அடிப்படையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தமிழ்ப் பள்ளியிலும் டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்

இன்று காஜாங் வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்நிகழ்வில் உரையாற்றிய காஜாங் வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்  திருமதி கெங்கம்மாள் முனுசாமி, பள்ளியில்  டிஜிட்டல் நூலகம் அமைக்க உதவ உதவும் படி  என்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை  கேட்டுக் கொண்டார்.

தற்போது  346 மாணவர்கள் பயிலும் வேளையில் 48  ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

காஜாங் வெஸ்ட் கண்ட்ரி தீமோர் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகவும் செம்மை யாகவும் இருக்க டிஜிட்டல் நூலகம் தேவைப்படுகிறது.

அந்த வகையில் டிஜிட்டல் நூலகம் அமைக்க சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று அவர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு போதுமான இடவசதியும் இருப்பதாக அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் பள்ளி வாரியத் தலைவர் சி. நாதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெ. ஜெயகாந்தன், துணை தலைமை ஆசிரியர்கள் ஐ.சாரதி கி.கோபிநாத்

இரா. யுவனேஸ்வரி உட்பட இதர ஆசியர்களும் மாணவர்களும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.