NATIONAL

சன்வே பஸ் ரேபிட் ட்ரான்சிட் (பிஆர்டி) பாதையில், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படும்

24 ஜூலை 2024, 9:46 AM
சன்வே பஸ் ரேபிட் ட்ரான்சிட் (பிஆர்டி) பாதையில், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படும்

கோலாலம்பூர், ஜூலை 24 - சனிக்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை சன்வே பஸ் ரேபிட் டிரான்சிட் (பிஆர்டி) பாதையில், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரேபிட் பேருந்து நிறுவனம் சன்வே ரேபிட் கேஎல் குட் ரன் 2024 நிகழ்வுடன் இணைந்து இந்த சரிசெய்தல் செய்யப் பட்டுள்ளது.

USJ 7 நிலையம், SJ692 பேருந்து நிறுத்தம் (KK Mart முன்), மைடின் USJ இல் உள்ள சவுத் குவே நிலையம், SJ67 பேருந்து நிறுத்தம், சன்வே லெகூன் நிலையம் (சன்வே பிராமிட் முன் உள்ள பஸ் நிலையம்), PJ 179 பேருந்து நிறுத்தத்தில் உள்ள மெந்தாரி நிலையம் (மேற்கு) மற்றும் சன்வே செத்தியா ஜெயா நிலையம் (KTM செத்தியா ஜெயா எதிரில்) ஆகிய இடங்களை தவிர அனைத்து சன்வே பஸ் ரேபிட் டிரான்சிட் நிலையங்களிலும் இந்தச் சேவை கிடைக்கும்.

மாற்றம் குறித்து பயனர்களுக்கு தெரிவிக்க ஒவ்வொரு நிலையத்திலும் அறிவிப்புகள் வைக்கப்படும்.

சன்வே பிஆர்டி சனிக்கிழமை காலை 11 மணிக்கு இயல்பான செயல்பாட்டைத் தொடங்கும்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.