புத்ராஜெயா, ஜூன் 2 - மலேசிய இலக்கவியல் கல்வி கற்றல் முன்னெடுப்பு (டெலிமா) செயலியைப் பயன்படுத்தி 23,000 க்கும் மேற்பட்ட புத்தக பற்றுச் சீட்டுகளை மாணவர்கள் மீட்டுள்ளதாக என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
கடந்த மே மாதம் 31 முதல் டிசம்பர் 31 வரை மாணவர்கள் இந்த பற்றுச்சீட்டுகளை மீட்டுக்கொள்ளலாம் என கல்வியமைச்சு கூறியது.
அறிவாற்றலும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைமுறையை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த டெலிமா திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் பயனளிக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த மே மாதம் 30ஆம் தேதி அறிவித்தது முதல் கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து கல்விக்கூட மாணவர்களுக்கான இந்த புத்தக பற்றுச்சீட்டு திட்டம் ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் அமைச்சு கூறியது.








