NATIONAL

மலேசியாவிற்கு வரும் சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரிக்கும்

16 ஏப்ரல் 2024, 7:18 AM
மலேசியாவிற்கு வரும் சீன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரிக்கும்

கோலாலம்பூர், ஏப் 16- மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அரச தந்திர உறவுகள் ஏற்பட்டு இவ்வாண்டுடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இரு நாட்டு மக்களுக்கிடையிலான வருகை மற்றும் பரிமாற்றங்கள் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று சீனா மற்றும் வெளிநாடுகள் நட்புறவு சங்கத்தின் தலைவர் யாங் வான் வான் மிங் கூறினார்.

சீன சுற்றுப்பயணிகள் மத்தியில் மலேசியா பிரசித்தி பெற்ற இடமாக விளங்கி வரும் நிலையில் கோவிட்-19 பெருந்தொற்று க்கு முந்தைய ஆண்டான 2019 ஐ விட அதிகமான சுற்றுப்பயணிகளை நாடு இவ்வாண்டு ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரிந்த சீன சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 31 லட்சம் பேராக இருந்த வேளையில் இவ்வாண்டு இறுதிவாக்கில் அந்த எண்ணிக்கை 33 லட்சத்து 60 ஆயிரம் பேராக அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற சீன-மலேசிய நட்புறவு சங்கத்தின் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

அறுவர் கொண்ட பேராளர் குழுவுக்குத் தலைமையேற்று யாங் இம்மாதம் 14 முதல் 17 வரை மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டுள்ளார், இந்த வருகையின் போது அப்பேராளர் குழுவினர் புத்ராஜெயா மற்றும் மலாக்கா ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வர்.

இதனிடையே, மலேசிய-சீன அரச தந்திர நட்புறவின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா குறித்து கருத்துரைத்த யாங், இவ்விரு நாடுகளும் நீண்ட காலமாக நட்புறவை பேணி வருவதோடு மலேசியாவை தனது முக்கிய வர்த்தகப் பங்காளியாகவும் சீன கருதுகிறது என்றார்.

மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவின் வியூக பங்காளியாகவும் மலேசியா விளங்கி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.