ad
ECONOMY

காஜாங் நகராண்மைக் கழகம் மதிப்பீட்டு வரியில்  RM 10/ தள்ளுபடியை வழங்குகிறது

7 ஜனவரி 2024, 5:15 AM
காஜாங் நகராண்மைக் கழகம் மதிப்பீட்டு வரியில்  RM 10/ தள்ளுபடியை வழங்குகிறது

ஷா ஆலம், ஜனவரி 7: காஜாங்  நகராண்மைக் கழகம்  ஜனவரி 1 முதல் பிப்ரவரி 29 வரை நடைமுறைக்கு வரும் வகையில் RM10 வரையிலான மதிப்பீட்டு வரியை   செலுத்தும்  முதல்  தொகுதிக்கு தள்ளுபடி வழங்குகிறது.

ஒரு வருடத்திற்கு நிலுவைத் தொகை இல்லாத முதல் 15,000  வரி செலுத்துநர் களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும் என Facebook வழியாக MPKj அறிவித்தது.

"பழைய முறைப்படி  மதிப்பீட்டு வரி பில்கள்  அனுப்பி வைக்கப் படாது, வரி செலுத்துபவர் ஆன்லைன் சேவை  மூலம் மதிப்பீட்டு வரிக்கான கட்டணத்தை சரிபார்த்து, அச்சிட்டு செலுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

பெயர், முகவரி, அடையாள அட்டை எண், சமீபத்திய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற கணினியில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் வரி செலுத்துவோருக்கு MPKj நினைவூட்டியது.

www.mpkj.gov.my மூலம் தள்ளுபடிகளை பெறத் தகுதியான கட்டணச் சேனல்கள்  Maybank2u; AmBank; HSBC Bank; RHB Bank; Bank Rakyat; JomPAY; PBTPay; CEPat dan Kawanku Phone Banking  வங்கி சேவைகள் மட்டுமே.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.