ad
ACTIVITIES AND ADS

துணையமைச்சர் டத்தோ ரமணன்  5 வழிபாட்டு தளங்களுக்கு  ரி.ம. 35,000.00 நன்கொடை.

22 டிசம்பர் 2023, 1:15 PM
துணையமைச்சர் டத்தோ ரமணன்  5 வழிபாட்டு தளங்களுக்கு  ரி.ம. 35,000.00 நன்கொடை.

செய்தி சு.சுப்பையா

சுங்கை.பூலோ.டிச.22-  பொதுத் தேர்தலின் போது " நான் வெற்றி பெற்றால் தனது நாடாளுமன்ற அலவன்ஸ் முழுமையாக தொகுதி மக்களின் மேம்பாட்டுக்காக செலவு செய்வேன் " என்று டத்தோ ரமணன் சுங்கை பூலோ மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். அந்த வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றும் வண்ணம் நேற்று சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 5 வழிபாட்டு தளங்களுக்கு ரி.ம. 35,000.00 நன்கொடையாக வழங்கினார்.

அவரது இந்த காசோலைகளை தொகுதி நாடாளுமன்ற செயலாளர் துவான் கையிரி, நாடாளுமன்ற அதிகாரி தமிழ் செல்வம் மற்றும் பலர் உடன் சென்று வழங்கினர்.

காலை 10.30 மணிக்கு சுங்கை பூலோ, புக்கிட் ராமான் புத்ராவில் உள்ள தமிழ் மெத்தடிஸ் திருச்சபைக்கு ரி.ம.10,000.00 வழங்கினார்  .  இக்காசோலையை தமிழ் திருச்சபையின் முதன்மை நிர்வாகி தோமஸ் சின்னப்பன், பாதிரியார் ஜெராட், புக்கிட் ரோத்தான் தமிழ் மெத்தடிஸ்ட் திருச்சபையின் முதன்மை நிர்வாகி ஜேசுதாஸ் சின்னப்பன், ராபர்ட் சுரேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த தமிழ் திருச்சபை வரலாற்றில் இது தான் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினரின் உதவித்தொகை கிடைத்தது என்று தோமாஸ் வெகுவாக டத்தோ ரமணனை பாராட்டினார்.

பின்னர் தொடர்ந்து சுங்கை பூலோ தாமான் இம்பியானில் உள்ள சீன ஆலயத்திற்கு ரி.ம. 5,000.00 வழங்கினார்.

அதனை தொடர்ந்து முன்னாள் எல்மீனா தோட்ட ஸ்ரீ வேங்கை முனீஸ்வரர் ஆலயத்திற்கு ரி.ம. 5,000.00 வழங்கினார். அந்த காசோலையை ஆலயத் தலைவர் வீரபத்திரன் பெற்றுக் கொண்டார்.

லாடாங் சுபாங்கிற்கு அருகிலுள்ள கரிஷ்மா தேவாலயத்திற்கு ரி.ம. 5,000.00 வாங்கினர். ரெவரண்ட் ஜேம்ஸ் இந்த காசோலையை பெற்றுக் கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணனின் இந்த நிதியுதவி இந்த தேவாலயத்தின் சமூக மேம்பாட்டு சேவைக்கு ஒரு ஊன்று கோலாக அமையும் என்று பாராட்டினார். இதற்கு முன்பு பல மாண்புமிகு க்கள் வருகை தந்தனர், ஆனால் டத்தோ ரமணன் மட்டுமே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியவர் என்று ரெவரண்ட் ஜேம்ஸ் மற்றும் ரெவரன்ட் ஜீவா தம்பதிகள் தெரிவித்தனர்.

மேலும் சுபாங், கம்போங் முகிபாவில் உள்ள திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு ரி.ம. 10,000.00 காசோலையை விரைவில் வழங்குவதாக அதிகாரி தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.