ஷா ஆலம், அக் 2- தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்றங்களுக்கு முழுமையானதீர்வை வழங்கும் வகையில் 10.00 வெள்ளி என்ற சமநிலையான அபராதச் சலுகையை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் வழங்குகிறது.மாநகர் மன்றத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை இந்தச் சலுகை வழங்கப்படுவதாக மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில் கூறியது.
போஸ்டரில் இடம் பெற்றுள்ள குற்றங்களைத் தவிர இதர போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத்தைச் செலுத்தும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் என்று அது தெரிவித்தது.
தடைசெய்யப்பட்ட நேரங்கள் மற்றும் பகுதிகளில் கனரக வாகனங்களை ஓட்டியது,
அமலாக்க அதிகாரிகளால் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டது மற்றும் செயல்படாத அல்லது கைவிடப்பட்ட வாகனங்கள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட குற்றங்களுக்கு இந்த நிலையான 10.00 வெள்ளி அபராதம் பொருந்தாது.
அதோடு மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வாகன நிறுத்துமிடங்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை
பழுதுபார்த்தல் அல்லது கழுவுதல் ஆகியவை குற்றங்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படாது.
இது தவிர, அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்றக் குற்றங்களுக்கும் இந்த சலுகைத் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த சலுகை தொடர்பான மேல் விவரங்களுக்கு www.mbsj.gov.my என்ற இணையதளத்தைப் வலம் வரலாம்.
SELANGOR
தேர்ந்தெடுக்கப்பட்டப் போக்குவரத்துக் குற்றங்களுக்கு வெ.10.00 அபராதம்- எம்.பி.எஸ்.ஜே. வழங்குகிறது
2 அக்டோபர் 2023, 8:27 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பெண் தொழில்முனைவோருக்கு உதவ சிலாங்கூர் ஐந்து வழிமுறைகளை முன்வைத்துள்ளது
Shalini Rajamogun, Yasmin Ramlan
29 ஏப்ரல் 2026

selangor
வறுமை ஒழிப்புத் திட்டங்களால் சிலாங்கூர் மக்களின் மகிழ்ச்சி குறியீடு உயர்வு: மந்திரி புசார்
Shalini Rajamogun, Fitri Hazim Hazam
29 ஏப்ரல் 2026

selangor
சிலாங்கூரில் பெட்ரோல், மின்சாரத்தைச் சேமிக்க வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை உதவுகிறது - மந்திரி புசார்
Shalini Rajamogun, Adam Azman
29 ஏப்ரல் 2026

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




