ECONOMY

சீ போட்டியில் மேலும் 4 தங்கப் பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் மலேசியா

13 மே 2023, 4:06 AM
சீ போட்டியில் மேலும் 4 தங்கப் பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் மலேசியா

புனோம் பென், மே 13- இங்கு நடைபெற்று வரும் 2023ஆம் ஆண்டிற்கான சீ போட்டி நேற்றுடன் ஏழாவது நாளை தொட்டுள்ள வேளையில் இப்போட்டியில்  மலேசியாவின் அடைவு நிலை தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்து வருகிறது.

நேற்று  கூடுதலாக நான்கு தங்கப்பதக்கங்களைப் பெற்ற போதிலும் பதக்கப் பட்டியலில்  நமது தேசிய அணி தொடர்ந்து ஏழாவது இடத்தில் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஐந்துக்கும் குறைவான இடங்களை பிடித்து வந்த மலேசியாவுக்கு இந்த அடைவு நிலை ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த 1983ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் கடந்தாண்டு வியட்னாமின் ஹனோயிலும் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமே மலேசியா ஆறாவது இடத்தை பிடித்தது.

நேற்றைய ஆட்டங்களில் மலேசியா கூடுதலாக நான்கு தங்கப்பதக்கங்களை மட்டுமே பெற்றது. இதனுடன் சேர்த்து 28 தங்கம், 36 வெள்ளி மற்றும் 59 வெண்கலப்பதக்கங்களை மலேசியா வெற்றி கொண்டுள்து.

நேற்று தேக்குவாண்டோ மற்றும் வூஷூ ஆகிய போட்டிகளின் வழி நான்கு தங்கப் பதக்கங்கள் மலேசியாவுக்கு கிடைத்தன. இதர போட்டிகளின் மூலம் ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும் ஒன்பது வெண்கலப்பதக்கங்களையும் அது பெற்றது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.