MEDIA STATEMENT

கணவரின் கார் மோதி மனைவி மரணம் !

29 ஏப்ரல் 2023, 4:32 AM
கணவரின் கார் மோதி மனைவி மரணம் !

கூலிம், ஏப் 29- கணவரின் காரில் மோதுண்டு மனைவி பரிதாபமாக

உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் கூலிம், தாமான் செலாசேயில்

நேற்றிவு நிகழ்ந்தது.

இந்த விபத்து குறித்த தகவலை கூலிம் மாவட்ட போக்குவரத்து போலீஸ்

தலைமையகம் நேற்றிரவு 7.00 மணியளவில் பெற்றதாக கூலிம் மாவட்ட

போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ரிட்சுவான் சாலே கூறினார்.

அறுபது வயதான கணவர் ஓட்டிய புரேட்டோன் சாகா கார் பாதசாரியான

தனது மனைவியை மோதியதோடு வீட்டின் எதிரே நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த பெரேடுவா மைவி காரையும் மோதியதாக அவர்

சொன்னார்.

இந்த விபத்தில் அந்த பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக

நேற்றிரவு இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

காரை பின்னோக்கி நகர்த்திய கணவர் கார் எண்ணெய் பெடலை

அழுத்தியதன் காரணமாக அக்கார் பின்புறம் இருந்த மனைவியையும்

வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரேடுவா மைவி காரையும்

மோதித் தள்ளியுது என்றார் அவர்.

இந்த சம்பவத்தில் கணவருக்கு காயம் ஏற்படவில்லை. எனினும் மனைவி

சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் பரிசோதனைக்காக

கூலிம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று

முகமது ரிட்சுவான் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்

சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு

வருவதாக அவர் மேலும் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.