கோத்தா பாரு, ஏப் 9- இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதி மைஜேபிஜே செயலி அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து 29 லட்சத்து 71 ஆயிரம் வாகனமோட்டிகள் அதனைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை (ஜேபிஜே) இயக்குநர் டத்தோ ஜைலானி ஹாஷிம் தெரிவித்தார்.அந்த செயலியை வாகனமோட்டிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை ஜேபிஜே தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார். இதுவரை இந்நடவடிக்கை சீராக நடந்து கொண்டிருக்கிறது, பணிகளை எளிதாக்கு வதற்கு ஏதுவாக இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி வாகனமோட்டிகளை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
இப்போது நாங்கள் மைஜேபிஜே செயலி பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், லைசென்ஸ்களை புதுப்பிப்பது மற்றும் காட்சிப்படுத்தும் பணிக்காக இந்த செயலியை இவ்வாண்டு
மத்தியில் மேம்படுத்தப் படுத்த இருக்கிறோம்
என்று அவர் கூறினார். நேற்றிரவு கிளந்தான் ஜேபிஜே ஏற்பாட்டில் நடைபெற்ற 40 ஆதரவற்ற சிறார்களுடன் நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
எந்த ஆலோசகர்களின் உதவியுமின்றி சாலை போக்குவரத்து இலாகாவின் சொந்த தகவல் தொழில்நுட்பக் குழுவால் இந்த இலக்கவியல் மயத் திட்டம் மேற்கொள்ளப் பட்டது என்றார் அவர்.
ANTARABANGSA
மைஜேபிஜே செயலியை 29.7 லட்சம் வாகனமோட்டிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்
9 ஏப்ரல் 2023, 6:12 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உலு கிள்ளான், யூகே பெர்டானா வில் உள்ள கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின் (EKVE) உயர்த்தப்பட்ட யூ-திருப்ப பாதை திறக்கப் பட்டு விட்டது.
Pakiya
14 பிப்ரவரி 2026

antarabangsa
இந்தியாவுக்கு 25 விழுக்காடு வரி விதிப்பு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

national
வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மலேசியா- இந்தோனேசியா இணக்கம்
n.pakiya
31 ஜூலை 2025

antarabangsa
பூகம்பத்தின் எதிரொலி- ஜப்பானில் 1.3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்தன
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




