MEDIA STATEMENT

இன்று மாலை  மந்திரி புசாரின்  முக்கிய அறிவிப்பினை  டி.வி சிலாங்கூரில்  பின் தொடரலாம்

31 மார்ச் 2023, 3:07 AM
இன்று மாலை  மந்திரி புசாரின்  முக்கிய அறிவிப்பினை  டி.வி சிலாங்கூரில்  பின் தொடரலாம்

ஷா ஆலம், மார்ச் 31: இன்று அரசு ஊழியர்களுடன் ரம்லான் ரஹ்மா கூட்டத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒரு முக்கிய செய்தியை வழங்க உள்ளார்.

ஷா ஆலம் அரசு நிர்வாகக் கட்டிடத்தில்  மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் ரம்ஜான் பண்டிகையை  ஒட்டி  நடைபெறும் சிறப்பு விழாவில் அரசு ஊழியர்களுடன்  நோன்பும்  திறப்பார்.

மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் மற்றும் மாநில நிதி அதிகாரி டாக்டர் அஹ்மட் ஃபட்ஸ்லி அகமட் தாஜுடின் மற்றும் மாநில ஆட்சிக்குழுவினரும்  இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

பேஸ்புக் மீடியா சிலாங்கூர் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியினை  Facebook Media Selangor  மற்றும் YouTube SelangorTV வழி பொதுமக்கள் பின்பற்றலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.