ad
EVENT

ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 15 வழிபாட்டுத் தலங்கள் வெ.255,000 மானியம் பெற்றன

12 பிப்ரவரி 2023, 6:22 AM
ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 15 வழிபாட்டுத் தலங்கள் வெ.255,000 மானியம் பெற்றன
ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 15 வழிபாட்டுத் தலங்கள் வெ.255,000 மானியம் பெற்றன

ஷா ஆலம், பிப் 12- இங்குள்ள தாமான் ஸ்ரீமூடா, ஸ்ரீ சுவர்ண ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற மாநில நிலையிலான பொங்கல் விழாவின் போது கிள்ளான்/ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள 15 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு 255,000 வெள்ளி வழங்கப்பட்டது.

இந்த மானியத்திற்கான காசோலைகளை சமூக பொருளாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார். இது, இவ்வாண்டிற்கான இரண்டாம் கட்ட நிதியளிப்பு நிகழ்வாக விளங்குகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வாரம் பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற மாநில நிலையிலான தைப்பூச நிகழ்வின் போது 45 ஆலயங்களுக்கு 650,000 வெள்ளி வழங்கப்பட்டதாக சமூகவியல் பொருளாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த நிதியளிப்பு நிகழ்வு ஆண்டு இறுதி வரை கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், ஆலயங்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கும் உதவுவதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இது புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள  தாமான் ஸ்ரீமூடா ஸ்ரீ சுவர்ண மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மாநில நிலையிலான பொங்கல் விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்வில் மாநில அரசிடமிருந்து மானியம் பெற்ற வழிபாட்டுத் தலங்களின் பெயர் மற்றும் மானியத் தொகை வருமாறு-

  1. ஷா ஆலம், செக்சன் 19, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்- வெ.10,000
  2. கிள்ளான், ஜாலான் மேரு, சித்தி விநாயகர் ஆலயம்- வெ.20,000 
  3. பண்டமாரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- வெ.20,000
  4. ஷா ஆலம், தாமான் ஸ்ரீமூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்- வெ.30,000
  5. கோலக் கிள்ளான், தாமான் கேம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்- வெ.10,000

6- கிள்ளான் நோர்த்ஹம்மக் தோட்டம், ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்- வெ.10,000

  1. கிள்ளான், கானட் பிரிட்ஜ், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்- வெ.20,000
  2. தாமான் செந்தோசா, அனைத்துலக கிருஷ்ணா விழிப்புணர்வு மையம்- வெ.15,000
  3. பண்டமாரான், தேவி காளியம்மாள் ஆலயம்- வெ.10,000
  4. ஸ்ரீ மகா ருத்ர முனீஸ்வரன் ஆலயம்- வெ.20,000
  5. பண்டமாரான், ஸ்ரீ மகா மாரியம்மன்  கோயில்- 20,000
  6. கோலக் கிள்ளான், ஸ்ரீ நாகம்மாள் ஆலயம்- வெ.10,000
  7. கிள்ளான், அருள்மிகு ராஜ ராஜ முனீஸ்வரர் ஆலயம்- வெ.20,000
  8. கிள்ளான் ஸ்ரீ பகவதி ஞானாந்தா கிரி வழிபாட்டு மையம்- வெ.20,000

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.