ad
ACTIVITIES AND ADS

இன்று மாலை  பெயருக்கு ஏற்றார் போல் ஒற்றுமைப் பொங்கலை செந்தோசா தொகுதி  கொண்டாடியது.

29 ஜனவரி 2023, 12:40 PM
இன்று மாலை  பெயருக்கு ஏற்றார் போல் ஒற்றுமைப் பொங்கலை  செந்தோசா தொகுதி   கொண்டாடியது.
இன்று மாலை  பெயருக்கு ஏற்றார் போல் ஒற்றுமைப் பொங்கலை  செந்தோசா தொகுதி   கொண்டாடியது.
இன்று மாலை  பெயருக்கு ஏற்றார் போல் ஒற்றுமைப் பொங்கலை  செந்தோசா தொகுதி   கொண்டாடியது.

கிள்ளான், ஜன 29 - செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் ஒற்றுமைப் பொங்கல் விழா இன்று மாலை 4.00 மணிக்கு   ஜாலான் முகமது தாஹிர் ஆஃப் ஜாலான் சுங்கை ஜாத்தியில் உள்ள செந்தோசா தொகுதி சேவை  மையத்துக்கு வளாகத்தில் வெகு  விமரிசையாகப்  பல இன மக்களும்  கலந்து கொள்ளச்  சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் பொங்கல்  விழாவையொட்டி பல்வேறு  தமிழர்  பாரம்பரிய மற்றும் கலை,  கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கோலம் போடுவது, தோரணம் பின்னுவது, பொங்கல்  வைப்பது, உரி அடிப்பது, சேலைக் கட்டுவது , பல்லாங்குழி விளையாட்டு மற்றும் கோலாட்டம்  ஆகியவையும் நடைபெற்றது.

இதில் சிறப்பு மற்ற இனச் சகோதரர்கள் கலந்து கொண்டு, அவர்களும்  பொங்கல்  என்றால் என்ன, பொங்கலுக்குத்  தமிழர்கள் என்ன  செய்வார்கள். ஏன்  அதனைச்  செய்கிறார்கள் என்ற விளக்கத்துடன்.  அவர்களும்  கோலம் போட்டி முதல்  உரி  அடித்தல் வரை  எல்லா போட்டிகளிலும்  கலந்து கொண்டு  மகிழ்ந்தனர்.

இதன் வழி நம் கலாச்சாரத்தைப் பற்றி  விருந்தினர்களும்  பங்கேற்பாளர்கள் அறிந்து கொண்டதுடன் , அவர்களுக்கு வாழை இலை  உணவும்  பரிமாறப்பட்டது  மிக  சுவாரஸ்யமாக  இருந்தது. உணவுகள்  முழுக்க ஹலால் வகை, அவை அனைத்தும் சைவ உணவுகள் என்றும் விளக்கினார்கள்  ஏற்பாட்டாளர்கள்.

வந்திருந்தவர்களுக்கு  நன்றி கூறிப்   போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கி   இந்த நிகழ்வு குறித்த  விளக்க உரையில்  பொங்கல் விழாவின் மகத்துவத்தைச் சமூகத்தின் அனைத்து நிலையில் உள்ள மக்களுக்கும் உணர்த்தும் நோக்கில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இது தவிர, ஒருவரை ஒருவர் நேசிப்பது, அன்பு காட்டுவது, பரஸ்பரம் உதவி கொள்வது போன்ற நற்குணங்கள் இளையோர் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்த விழா நோக்கமாக கொண்டுள்ளது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.