ECONOMY

எம்.பி.எஸ்.ஏ. ரிக்ரியேஷன் கிளப்பின் சின்னம் வரையும் போட்டி

27 ஜனவரி 2023, 5:11 AM
எம்.பி.எஸ்.ஏ. ரிக்ரியேஷன் கிளப்பின் சின்னம் வரையும் போட்டி

ஷா ஆலம், ஜன 27- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ரிக்ரியேஷன் கிளப் (பொழுது போக்கு மையம்) சின்னத்தை உருவாக்கும் போட்டியில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்தப் போட்டியின் பிரதான வெற்றியாளருக்கு 2,000 வெள்ளி ரொக்கப் பரிசை வழங்கப்படும்.

இந்தப் போட்டியில் அனைத்து மலேசிய குடிமக்களும் பங்கேற்கலாம். ஒவ்வொரு பங்கேற்பாளரும் எத்தனை சின்னங்களை வேண்டுமானாலும்  அனுப்பலாம் என்று மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தப் போட்டியின் நோக்கம்  எம்.பி.எஸ்.ஏ. ரிக்ரியேஷன் கிளப்பிற்கு சின்னத்தைப் பெறுவதாகும். தேர்ந்தெடுக்கப்படும் சின்னம் அந்த கிளப்பின் அடையாளமாகப் பயன்படுத்தப்படும்.

பிரதான வெற்றியாளருக்கான பரிசு தவிர்த்து நான்கு  வெற்றியாளர்கள் பரிசாக தலா 500 வெள்ளி ரொக்கத்தைப் பெறுவார்கள்  என்று அது பேஸ்புக் மூலம் கூறியது.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் தேதி அடுத்த பிப்ரவரி 12 ஆகும். இப் போட்டி தொடர்பான மேல் விபரங்களுக்கு  ஹைருடீன் சைடானை 019-664 5424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது hairuddin@mbsa.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

நுழைவுப் படிவத்தை https://forms.gle/Br6PygaPiWwwGS6z5 என்ற இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.