ECONOMY

தாமான் மேடான் தொகுதியில் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் 300 மாணவர்களுக்கு உதவி

27 ஜனவரி 2023, 4:38 AM
தாமான் மேடான் தொகுதியில் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் 300 மாணவர்களுக்கு உதவி

ஷா ஆலம், ஜன 27- சிலாங்கூ மாநில அரசின் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் தாமான் மேடான் தொகுதியைச் சேர்ந்த 300 மணாவர்கள் உதவி பெற்றனர்.

இந்த உதவித்  தொகைக்கான 159 பற்றுச் சீட்டுகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய பற்றுச் சீட்டுகள் அடுத்த மாதம் விநியோகிக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷியாம்சுல் பிர்டாவுஸ் கூறினார்.

தாமான் மேடான்  தொகுதியிலுள்ள 159 மாணவர்களுக்கு  தலா 100 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய 141 மாணவர்கள் இந்த பற்றுச்சீட்டினை அடுத்த மாதம் பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் மார்ச் மாதம் தொடங்கும் புதிய பள்ளித் தவணைக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு ஏதுவாக தொகுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு இந்த உதவி நிதி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

மாநில அரசின் இந்த உதவித் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததாக அவர் மேலும் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.