ECONOMY

ஷா ஆலம், பெர்சியாரான் பண்டாராயா ஜனவரி 24 முதல் 29 வரை போக்குவரத்துக்கு மூடப்படும்

21 ஜனவரி 2023, 4:34 AM
ஷா ஆலம், பெர்சியாரான் பண்டாராயா ஜனவரி 24 முதல் 29 வரை போக்குவரத்துக்கு மூடப்படும்

ஷா ஆலம், ஜன 21- சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பை முன்னிட்டு இம்மாதம் 24 முதல் 29 வரை ஷா ஆலம், பெர்சியாரான் பண்டாராயாவின் ஒரு பகுதி போக்குவரத்து மூடப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றம் கூறியது.

அச்சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் குறிப்பிட்ட அக்காலக்கட்டத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக மாநகர் மன்றம் அவ்வப்போது வெளியிடும் உத்தரவுகளைப் பின்பற்றி நடக்கும்படி வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த போக்குவரத்து தடை தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் 03-55222734 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெறும் சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பில் 10,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.