ECONOMY

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 286ஆக குறைந்தது- இறப்புகள் பதிவாகவில்லை

15 ஜனவரி 2023, 6:13 AM
கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 286ஆக குறைந்தது- இறப்புகள் பதிவாகவில்லை

ஷா ஆலம், ஜன 15- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை  300க்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 286 பேர் இந்நோய்த் தொற்றுக்கு இலக்கான வேளையில் அவற்றில் ஒரு சம்பவம் வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் அடையாளம் காணப்பட்டது.

கோவிட்-19 தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது. இந்நோய்க் பலியானவர்களின் எண்ணிக்கை 36,908 ஆக தொடர்ந்து இருந்து வருகிறது.

இதனிடையே, நாட்டில் 10,634 பேர் கோவிட்-19 பெருந்தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர் கொண்டுள்ளனர். அவர்களில் 10,175 பேர் அல்லது 95.7 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 439 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏழு பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.