ECONOMY

ஆர்.டி.எம். நிகழ்ச்சியில் ரிடுவான் தே பங்கேற்பதை தடுக்க அமைச்சர் உத்தரவிடவில்லை

16 டிசம்பர் 2022, 6:25 AM
ஆர்.டி.எம். நிகழ்ச்சியில் ரிடுவான் தே பங்கேற்பதை தடுக்க அமைச்சர் உத்தரவிடவில்லை

புத்ராஜெயா, டிச 16- ஆர்.டி.எம். தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் இஸ்மாமிய சமய நிகழ்ச்சியில் பிரபல சமய போதகர் டாக்டர் ரிடுவான் தே பங்கேற்பதிலிருந்து தடுப்பதற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அந்த சமய போதகருக்கு எதிராக தாங்கள் தடை விதித்தாக கூறப்படுவதை மறுத்த தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில், அது தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது எனக் கூறினார்.

இன்று இங்கு நடைபெற்ற தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சின் பணியாளர்களுடனான சந்திப்பு நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த சமய நிகழ்வின் முக்கிய பங்கேற்பாளர்கள் பட்டியலில் இருந்து ரிடுவான் தே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு பிரபல சமய போதகர் ஹர்யாந்தோ ரிசால் ரோக்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.